உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை.
தியாகவனம்
திருகோணமலை தியாகவனம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட அல்லது நினைவுக்கல் நாட்டப்பட்ட மாவீரர்களின் விபரம்
எமக்குக் கிடைத்த மாவீரர் விபரக்கோவை (1982–2004 வரையிலான விபரங்களைக் கொண்டது), சுமார் 12 ஆயிரம் மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளைக் கொண்டிருந்தது. அத்தரவுகளுடன், ஊடகச் செய்திகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் துயிலுமில்லத் தரவுகளை நாம் பதிவு செய்துள்ளோம்.