கப்டன் நாயகி அவர்கள் பாவற்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். ஆறுமுகம் இலங்கநாயகி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஆகஸ்ட் 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்விற்கெதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.