மேஜர் இனியவன் (ரமேஸ்) அவர்கள் வேலணை கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணபிள்ளை தனநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 டிசம்பர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான ஏற்பட்ட நேரடிமோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.