லெப்டினன்ட் வேந்தன் அவர்கள் சுண்ணாகம் தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்வராசா சசிராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர் 2 நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.