வீரவேங்கை இளவதனி அவர்கள் சேச் லேன், குளமங்கால், மல்லாகம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வில்லியம் ஜெயரட்ணம் உதயகுமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.