லெப்.கேணல் நளாயினி கடற்தாக்குதலணியின் தளபதி கடற்புலி லெப்.கேணல் இளநிலா அவர்கள் இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். செல்வராசா அனுராஜினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 அக்டோபர் 1995 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையின் “ரணகஜ” என்ற தரையிறங்கும் கலம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.