2-ஆம் லெப்டினன்ட் செங்கையன் (நிரஞ்சன்) அவர்கள் ஊர்மலை, திருகோணமலையைச் சேர்ந்தவர். மகாதேவன் சுதாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17.11.1993 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 26 நவம்பர் 1993 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.