மாவீரர் வசந்த் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுந்தரமூர்த்தி புருஷோத்தமன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.