மாவீரர் மலைமகள் அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தாமரைச்செல்வன் மோகனா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.