மேஜர் துஸ்யந்தன் அவர்கள் ஒட்டுசுட்டான், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். தர்மலிங்கம் ஜெயக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 செப்டம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளைப் பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.