2-ஆம் லெப்டினன்ட் அறிவழகன் (தயானந்தன்) அவர்கள் கந்தசாமி கோவிலடி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இராமையா மனோகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 நவம்பர் 1992 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப் பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.