லெப்டினன்ட் லலிதா அவர்கள் தம்பலகாமம், திருகோணமலையைச் சேர்ந்தவர். பாலசுந்தரம் இரஞ்சிதமலர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஆகஸ்ட் 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி - ஆனையிறவு படை சங்கிலித்தொடர் நிலைகள் மீது புல்லாவெளிப் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.