லெப்டினன்ட் அப்பா அவர்கள் மயிலிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுந்தரலிங்கம் குமாரகுலசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஏப்ரல் 1991 அன்று யாழ். மாவட்டம் நீராவியடிப் பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.