வீரவேங்கை நிதி அவர்கள் அம்பாள்புரம், கனகபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இரத்தினசிங்கம் சசிகலா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் யாழ். மாவட்டம் பலாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 14 டிசம்பர் 1990 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.