வீரவேங்கை ஆனந்தராஜ் அவர்கள் சின்னச்சாலம்பன், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். நாகராசா தம்பிராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 நவம்பர் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.