வீரவேங்கை லூக்காஸ் அவர்கள் நாவலப்பிட்டி, கண்டி, சிறிலங்காவைச் சேர்ந்தவர். நீக்கிலாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 பிப்ரவரி 1986 அன்று யாழ். மாவட்டம் தாவடிப் பகுதியில் எமது தும்புத்தொழிற்சாலை மீது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். விடுதலைப் போரில் மடிந்த முதல் மலையக மாவீரர் இவராவார்.
இந்த மாவீரரின் முழு விவரங்கள்
பணி விபரங்கள்
படைய நிலை
வீரவேங்கை
இயக்கப் பெயர்
லூக்காஸ்
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர்
நீக்கிலாஸ்
சொந்த இடம்
நாவலப்பிட்டி, கண்டி
மாவட்டம்
வெளி (சிறிலங்கா)
பிறந்த நாள்
12.03.1970
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள்
27.02.1986
நிகழ்வு மாவட்டம்
யாழ்ப்பாணம்
நிகழ்வு
யாழ். மாவட்டம் தாவடிப் பகுதியில் எமது தும்புத்தொழிற்சாலை மீது சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது. மாவீரர்களை எமது இனவிடுதலைப் போரின் வரலாற்று நாயகர்களாக, தேசிய வீரர்களாக நாம் போற்றுகிறோம். அவர்களது நினைவுகள் காலத்தாற் கரைந்துபோகாது, என்றும் எமது நெஞ்சங்களில் நிலைத்திருக்க வேண்டுமென்பதற்காக நாம் அவர்களுக்கு நினைவு விழாக்கள் எடுக்கிறோம். நினைவுச் சின்னங்கள் நிறுவிக் கௌரவிக்கிறோம். வீர வணக்கச் சடங்குகளுடன் மாவீரர்களது வித்துடல்களை விதைப்பதும், நினைவுக் கல் நாட்டுவதும், அவர்களது கல்லறைகளைப் புனிதச் சின்னங்களாகப் பூசிப்பதும், அவர்களது துயிலும் இல்லங்களைப் புனிதத் தலங்களாக வழிபடுவதும் எமது மக்களால் விரும்பப்படும் வழக்காகிவிட்டது.