வீரவேங்கை ஆறுமுகம் அவர்கள் கிளிவெட்டி, மூதூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். பத்தக்குட்டி அற்புதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 பிப்ரவரி 1986 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூர் நீலாப்பொல பகுதியில் சிறிலங்கா படையினர் மீதான கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.