கடற்கரும்புலி லெப்.கேணல் கார்குழலி அவர்கள் மிருசுவில் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கனகலிங்கம் சுகந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 ஜனவரி 2007 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.