கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் அவர்கள் கரந்தன், நீர்வேலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அருள்சீலன் துருசிலாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 மார்ச் 2003 அன்று அனைத்துலக கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் வணிகக்கப்பலை சிறிலங்கா கடற்படை வழிமறித்து தாக்கியபோது அக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.