காவல்துறை மாவீரர் தலைமைக் காவலர் அன்ரனி ஜெயந்தன் அவர்கள் வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். யோசப் அன்ரனிஜெயந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 அக்டோபர் 2000 அன்று யாழ். மாவட்டம் எழுமட்டுவாள்ப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.