லெப்டினன்ட் சேதுவாணன் (சேதுராமன்) அவர்கள் இன்ஸ்பெக்ரர் ஏத்தம், பொத்துவில், அம்பாறையைச் சேர்ந்தவர். கந்தசாமி யோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 செப்டம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடு நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினர் மீதான ஊடுருவித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.