2-ஆம் லெப்டினன்ட் பிரியங்கா (வனஜா) அவர்கள் உடுத்துறை, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுந்தரலிங்கம் சுலக்சனா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூன் 1999 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.