வீரவேங்கை வளர்மதி அவர்கள் காயத்திரி கிராமம், திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். தியாகராசா சுதாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருக்கோவில் பகுதிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 12 நவம்பர் 2000 அன்று அம்பாறை மாவட்டம் திருகோவில் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் இவர் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
பொறுப்பு, படையணி, ஒளிப்படம் மற்றும் துயிலுமில்ல விபரம் சேர்ப்பு
திருத்தல் மூலம்
உறவினர் / நண்பர்
“
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.