லெப்டினன்ட் புரட்சிக்காவலன் அவர்கள் நெல்லியான், செம்பியன்பற்று, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாலசுப்பிரமணியம் ராஜ்கபூர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூன் 1999 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.