2-ஆம் லெப்டினன்ட் பவமூர்த்தி அவர்கள் மகிழூர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தர்மலிங்கம் சண்முநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 மே 1999 அன்று மன்னார் மாவட்டம் சிராட்டிக்குளம் பகுதியை நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.