2-ஆம் லெப்டினன்ட் நதிசீலன் அவர்கள் பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவராசா கருணாநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 மே 1999 அன்று மன்னார் மாவட்டம் சிராட்டிக்குளம் பகுதியை நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.