மேஜர் தவசுந்தரம் (ராஜ்மோகன்) அவர்கள் 3-ஆம் குறிச்சி, மண்டூர், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பாலன் சுதாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 1999 அன்று மன்னார் மாவட்டம் சிராட்டிக்குளப் பகுதியில் ரணகோச சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.