மேஜர் நிதிராஜ் (செம்பியன்) அவர்கள் பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், திருகோணமலையைச் சேர்ந்தவர். தம்பிப்பிள்ளை தர்மலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 ஜூலை 1998 அன்று திருகோணமலை மாவட்டம் தம்பலகாமப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.