கப்டன் சுரேஸ் அவர்கள் நாவலடி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நடராசா ஜெயக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 செப்டம்பர் 1997 அன்று வவுனியா மாவட்டம் கனகராயன்குளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.