கப்டன் மணி அவர்கள் பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்தவர். அன்ரனிவில்லியம் சாள்ஸ்லோரன்ஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜனவரி 1997 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் - ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.