லெப்.கேணல் நாதன் அவர்கள் அரியாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தையா பேரின்பநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 அக்டோபர் 1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வைத்து சிறிலங்கா அரசின் கைக்கூலிகளினால் சுடப்பட்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.