கப்டன் தரங்கிளி அவர்கள் சேமமடுக்குளம், ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். கந்தசாமி சுதாறஞ்சிதம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 செப்டம்பர் 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியிலிருந்து முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.