கப்டன் சிவநாதன் அவர்கள் 4-ஆம் வாய்க்கால், மருதநகர், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இரத்தினம் கலைச்செல்வன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஆகஸ்ட் 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்விற்கெதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.