மேஜர் இமையவன் (கேசவன்) அவர்கள் மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஐயாத்துரை குகதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 4 ஆகஸ்ட் 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்விற்கெதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.