வீரவேங்கை இளவழுதி (துஸ்யந்தின்) அவர்கள் கொக்குவில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிதரம்பரப்பிள்ளை தனேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஜூலை 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவிலிருந்து பரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.