லெப்டினன்ட் கலா அவர்கள் வாதரவத்தை, புத்தூர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இராஜநாகமுத்து பிறேமலதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூலை 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவிலிருந்து பரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.