வீரவேங்கை சாந்தி அவர்கள் அச்செழு வடக்கு, நீர்வேலி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவஞானம் ஜெனிதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூலை 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவிலிருந்து பரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.