வீரவேங்கை கலையாழயன் அவர்கள் முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். வேலாப்போடி நல்லரட்ணம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூலை 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவிலிருந்து பரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.