மேஜர் கண்ணகி அவர்கள் கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவசுப்பிரமணியம் சுபகௌரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.