கடற்கரும்புலி லெப்.கேணல் மதன் (சோலைநம்பி) அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். யோகச்சந்திரன் ரதீஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 13 பிப்ரவரி 1996 அன்று சிறிலங்கா - இந்திய கடற்படைகளினால் சுற்றிவளைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் வழங்கற் கப்பல் மூலம் திருகோணமலை துறைமுகத்தை தாக்கச் சென்றவேளை வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.