உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
Thumbnail
மேஜர் அன்பரசன் (இளந்திரையன்)
குணசீலன் முரளிதரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

மேஜர் அன்பரசன் (இளந்திரையன்) அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். குணசீலன் முரளிதரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 8 ஜனவரி 2007 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.

இந்த மாவீரரின் முழு விவரங்கள்
சேவை விவரங்கள்
நிலை மேஜர்
இயக்கப் பெயர் அன்பரசன் (இளந்திரையன்)
படையணி / துறை இம்ரான் - பாண்டியன் படையணி
தனிப்பட்ட விவரங்கள்
இயற்பெயர் குணசீலன் முரளிதரன்
சொந்த இடம் வல்வெட்டித்துறை
மாவட்டம் யாழ்ப்பாணம்
பால் ஆண்
பிறந்த நாள் 06.07.1980
வீரச்சாவு நிகழ்வு விவரங்கள்
வீரச்சாவு நாள் 08.01.2007
நிகழ்வு மாவட்டம் வவுனியா
நிகழ்வு வவுனியா மாவட்டம் புளியங்குளப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு.
விதைப்பு விபரங்கள்
துயிலுமில்லம் தேராவில்
துயில்நிலை வித்துடல்
குடும்ப மாவீரர் விவரங்கள்
தரவு கிடைக்கவில்லை இம் மாவீரரரின் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகள் இல்லை.
மேலதிக குறிப்புகள்
மேலதிக விவரங்கள் <p>1994-இல் இவரின் தாயாரால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒப்படைக்கப்பட்டு இணைக்கப்பட்ட இவர், 'இளந்திரையன்' (பின்னர் 'அன்பரசன்') எனப் பெயரிடப்பட்டுச் சிறுத்தைப் படையணியில் தன் போராட்டப் பணியைத் தொடங்கினார். 1996-இல் நடைபெற்ற 'ஓயாத அலைகள்-1' நடவடிக்கையின் போது, அளம்பிலில் நடந்த எதிரியின் தரையிறக்கத் தாக்குதலை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றிப் பலத்த காயமடைந்தார்.</p> <p>பின்னர் களமருத்துவப்  பிரிவிலும், உந்துருளி படையணி மற்றும் இம்ரான் பாண்டியன் படையணியிலும் பணியாற்றிய இவரது திறமையைக் கண்டு தலைமை இவரை 'வேவுப்புலி'யாக்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனையிறவு வெற்றிக்குக் காரணமான வேவுப்புலிகளில் இவரும் ஒருவர். வேவு நடவடிக்கை ஒன்றின்போது கிளாலிப் பகுதியில் வீரச்சாடைந்த தோழனின் வித்துடலை எதிரியிடம் சிக்காமல் சுமந்துகொண்டு நீந்திக் கரை சேர்த்த இவரது தீரத்தைப் பாராட்டி, தேசியத் தலைவர் பரிசளித்துக் கௌரவித்தார். </p> <p>சிறிலங்கா படைகளிற்கு எதிரான 37 சமர்களில் இவர் பங்கெடுத்த இவர் 18 முறை விழுப்புண்ணடைந்தார்.</p>
மூல விவரங்கள்
விவர மூலம் அதிகாரப்பூர்வ ஊடகம்
பதிவு விபரங்கள்
தொடர்எண் 18014
பதிவு நாள் 2019-11-26 00:06:00
திருத்த நாள் 2026-10-14 03:56:34
திருத்தலுக்கான காரணம் சொந்த இடம், பிறந்த நாள், விதைப்பு விபரம், மேலதிக தகவல்கள் இணைப்பு
திருத்தல் மூலம் உறவினர் / நண்பர்
எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருக்கிறது.
மேதகு வே.பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர்