வீரவேங்கை மதியழகன் அவர்கள் மல்லாகம் மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சபாரட்ணம் யோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.