2-ஆம் லெப்டினன்ட் பைந்தமிழ் அவர்கள் அக்கரைப்பற்று, அம்பாறையைச் சேர்ந்தவர். வெள்ளைக்குட்டி தில்லையம்பலம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 அக்டோபர் 1995 அன்று யாழ். மாவட்டம் அச்சுவேலிப் பகுதியில் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.