கப்டன் வீசாலி அவர்கள் புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவஞானம் தனலட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஐந்து பாரிய முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.