கப்டன் பார்த்தீபா அவர்கள் சண்டிலிப்பாய் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவராஜா சுபதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூலை 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஐந்து பாரிய முகாம்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.