மேஜர் தென்றல்மாறன் (கமிலோ) அவர்கள் பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நவரத்தினம் கருணைவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது 14 நவம்பர் 1993 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.