2-ஆம் லெப்டினன்ட் காரிகை அவர்கள் மகாறம்பைக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். மருதுப்பிள்ளை அஞ்சலாதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.