லெப்டினன்ட் பாபு அவர்கள் ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்வநாயகம் ரவீந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஏப்ரல் 1987 அன்று யாழ். மாவட்டம் தொண்டமானாறு மயிலியத்தனைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.