கப்டன் குயிலி (சுதா) அவர்கள் பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இராசேந்திரம் இன்பவதினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 செப்டம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளைப் பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது