2-ஆம் லெப்டினன்ட் விவேகன் அவர்கள் ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பொன்னன் கிருபாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 செப்டம்பர் 1993 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் சிறிலங்கா வான்படை வானூர்திகள் நடத்திய குண்டுவீச்சின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.